இந்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 80.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 199.37 ஆகும். தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.
டி20 உலகக்கோப்பை 2026 பைனலில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி கோப்பையை வெல்ல சஞ்சு சாம்சன் முக்கிய பங்கு வகித்தார். இறுதிப்போட்டியில் வெறும் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் என அதிரடி அரைசதம் அடித்து அசத்தினார்.
சூப்பர் 8 சூற்றில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முக்கியமான 97 ரன்கள் விளாசிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் அரை சதம் விளாசி இருந்தார். பைனலிலும் சூப்பராக விளையாடி மொத்தமாக 321 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருது வென்றார்.
23
கவுதம் கம்பீர் குறித்து சஞ்சு சாம்சன்
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் தனக்கு நீண்ட கால உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சு சாம்சன், "கௌதி பாய்க்கும் (கௌதம் கம்பீர்) எனக்கும் ரொம்ப பழைய உறவு இருக்கு. நான் KKR அணியில் இருந்தபோது அவரைச் சந்தித்தேன்.
அப்போது அவர் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். அவரும் டெல்லியில்தான் வசிக்கிறார். அவர் பயிற்சி பெற்ற அதே அகாடமியில்தான் நானும் விளையாடினேன். அதனால் இது ரொம்ப நீண்ட கால உறவு. அங்கிருந்து இப்போது வரை நடந்த விஷயங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
33
கோலி சாதனையை முறியடித்த சஞ்சு
இந்த உலகக்கோப்பை தொடரில், சாம்சன் 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 80.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 199.37 ஆகும். இதில் 27 ஃபோர்களும், 24 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். மேலும், 2014 T20 உலகக்கோப்பையில் விராட் கோலி அடித்த 319 ரன்களை முறியடித்து, ஒரே T20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.