தமிழக வீரர் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வெறித்தனமான ரசிகர் ஆவார். விஜய்யின் புகைப்படத்தை தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி மற்றும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
24
ஸ்டாலினை சந்தித்த வருண், வாஷிங்டன்
அப்போது உலக்கோப்பையை இந்திய அணி வெல்ல பங்காற்றியதற்காக இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் ஸ்டாலினுக்கு இந்திய அணியின் ஜெர்சி மற்றும் கேப் பரிசளித்தனர். முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் திருவள்ளூவர் சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார். தொடர்ந்து இருவரும் உலகக்கோப்பை நினைவுகளை ஸ்டாலினுடன் பகிர்ந்து கொண்டனர்.
34
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் சுழற்பந்து இரட்டையர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருடனான மறக்கமுடியாத தருணங்கள். விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் செதுக்கப்பட்ட அவர்களது பயணத்தைப் பற்றி அவர்களுடன் உரையாடியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் வரும் காலங்களில் இன்னும் பல ஆட்ட நாயகன் விருதுகளையும் (match-winning spells), பெருமைமிகு தருணங்களையும் படைக்க வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் பந்துவீச்சில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய விக்கெட் டேக்கராக வருண் திகழ்ந்தார். மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அக்சர் படேல் அணியில் இருந்ததால் வாஷிங்டன் சுந்தர் இந்தத் தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.
விஜய்யின் தீவிர ரசிகர்
வருண் சக்கரவர்த்தி நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வெறித்தனமான ரசிகர் ஆவார். விஜய்யின் புகைப்படத்தை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். இந்த நிலையில், அரசியலில் விஜய்க்கு நேர் எதிராக உள்ள ஸ்டாலினை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உலகக்கோப்பையை வென்ற பிறகு, வருண் சக்கரவர்த்தியும், வாஷிங்டன் சுந்தரும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த திருவண்ணாமலைக்கு சென்று 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.