ஆரம்பமே அமர்களம்! விஜயின் மாஸ்டர் பாடலை போட்டு ஜடேஜாவை வரவேற்ற RR! CSK சாம்சனுக்கு வேற லெவல்!

Published : Nov 15, 2025, 11:59 AM IST

ஐபிஎல் வீரர்களின் டிரேடு முறையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். இதற்கு பதிலாக, சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடு செய்யப்பட்டுள்ளனர்.

PREV
15

19வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்று மாலை 5 மணிக்குள் இறுதி செய்து வெளியிட வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது. இதனால் வீரர்களை வாங்குவதிலும் டிரேடு எனப்படும் மற்ற அணிக்கு வழங்குவதிலும் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

25

அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். அவரை டிரேட் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

35

அதில் சென்னை மைதானத்தில் எம்எஸ் தோனி சிஎஸ்கே ஜெர்சியிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ஜெர்சியிலும் ரசிகர்களுக்கு மத்தியில் உள்ளனர். அப்போது தோனி ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கை காட்டுவார். அந்த கூட்டத்தில் ஒரு பேனரில் விசில் போடு சஞ்சு சாம்சன் என எழுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து சஞ்சு ஜெர்சி மஞ்சள் நிறமாக மாறுகிறது.

45

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம்கரனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடு செய்யப்பட்டதாக சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரவீந்திரன் ஜடஜா, சாம் கரன் முழு சம்மதத்துடன் ராஜஸ்தான் அணிக்கு இருவரும் டிரேடு செய்யப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

55

சிஎஸ்கே இருந்து டிரேட் செய்த ஜடேஜாவுக்கு விஜயின் மாஸ்டர் பாடலுக்கு வீடியோ வெளியிட்டு வரவேற்றது. என் நெஞ்சில் குடியிருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி என ஜடேஜா கூறும் வீடியோவை ராஜஸ்தான் அணி வெளியிட்டது. ஒரு வீரர் புதிய அணியில் சேர சம்மதித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக அவரை டிரேடு செய்ய முடியும். அவர் சம்மதிக்காதபட்சத்தில் டிரேடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories