ஷாருக்கானுக்கு போட்டியாக களமிறங்கிய சல்மான் கான்..! ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு அணிக்கு ஓனர்

First Published Oct 21, 2020, 5:25 PM IST

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு அணியை சல்மான் கான் சகோதரர் வாங்கியுள்ளார்.
 

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல, பிக் பேஷ் லீக், மஸான்ஸி சூப்பர் லீக், வங்கதேச ப்ரீமியர் லீக், கரீபியன் ப்ரீமியர் லீக், கனடா டி20 ப்ரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
undefined
அந்தவகையில் இந்த ஆண்டிலிருந்து இலங்கையில் லங்கா ப்ரீமியர் லீக் என்ற பெயரில் இந்த ஆண்டு முதல் டி20 லீக் தொடர் நடத்தப்படவுள்ளது. வரும் நவம்பர் 21ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது.
undefined
இந்நிலையில், லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் “கண்டி டஸ்கர்ஸ்” என்ற அணியை பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் சொஹைல் கான் மற்றும் தந்தை சலீம் கானும் அந்தாணியை வாங்கியுள்ளனர்.
undefined
ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக ஷாருக்கான் இருக்கும் நிலையில், லங்கா ப்ரீமியர் லீக்கில் கண்டி டஸ்கர்ஸ் அணியை சல்மான் கானின் குடும்பத்தினர் வாங்கி, உரிமையாளர் ஆகியிருக்கின்றனர்.
undefined
சல்மான் கான் சகோதரர் சொஹைல் கான் வாங்கியுள்ள கண்டி டஸ்கர்ஸ் அணியில் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் ஆடுகிறார்.
undefined
மேலும் இலங்கை கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களான குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோரும் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் வஹாப் ரியாஸ் மற்றும் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் லியாம் பிளங்கெட்டும் உள்ளனர்.
undefined
click me!