ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க வேண்டிய வாழ்வா-சாவா போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி அடைந்து, பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமலேயே தொடரிலிருந்து வெளியேறியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிக்ன் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அரைசதம் அடித்தனர். சாய் சுதர்சன் 53 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 37 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார். ஜோஸ் பட்லர் 27 பந்துகளில் 57 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்பு 230 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய சிஎஸ்கே 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியைச் சந்தித்தது. சஞ்சு சாம்சன் கோல்டன் டக் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஷிவம் துபே 17 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து டாப் ஸ்கோரராக இருந்தார். மேத்யூ ஷார்ட் 14 பந்துகளில் 24 ரன்களும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 பந்துகளில் 16 ரன்களும், அன்ஷுல் கம்போஜ் 8 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர்.