#AUSvsIND அவங்க 3 பேரும் டேஞ்சரஸ் பிளேயர்ஸ்.. உஷாரா இருங்க..! இந்திய அணிக்கு சச்சினின் பகிரங்க எச்சரிக்கை

First Published Dec 13, 2020, 4:03 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்(பார்டர் கவாஸ்கர் டிராபி) முதல் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. அந்த போட்டி வரும் 17ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
undefined
அப்போது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடையில் இருந்த ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் ஆஸி., அணியில் ஆடவில்லை. ஆனால் இம்முறை அவர்கள் ஆடுவது இந்திய அணிக்கு சவாலான காரியம். மேலும் இந்திய அணியில் விராட் கோலி கடைசி 3 போட்டிகளில் ஆடாதது, சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா இந்த தொடரில் ஆடாதது ஆகிய விஷயங்கள் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும்.
undefined
இந்நிலையில், அடிலெய்டு டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்கு முக்கியமான எச்சரிக்கையை முன்கூட்டியே விடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியா சென்றபோது(2018-2019) அந்த அணியின் முக்கியமான வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் ஆடவில்லை. ஆனால் இம்முறை அவர்கள் இருவருமே ஆடுகின்றனர். மேலும் லபுஷேனும் ஆடுகிறார். எனவே கடந்த முறையை விட இம்முறை ஆஸ்திரேலியா சிறந்த அணியை பெற்றிருக்கிறது.
undefined
இந்திய அணியில் பந்தை நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய மற்றும் நல்ல வெரைட்டியான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் உள்ளது. ஆஃப் ஸ்பின்னர் மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் என 2 விதமான ஸ்பின்னர்களும் உள்ளனர் என்று இந்திய அணிக்கு இருக்கும் சவாலையும் இந்திய அணியின் பலங்களையும் பற்றி பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
undefined
click me!