#AUSvsIND இப்ப தெரியுதா நான் யாருனு..? அதிரடி சதமடித்து அணி நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்த ரிஷப் பண்ட்

First Published Dec 13, 2020, 2:00 PM IST

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரிஷப் பண்ட், அதிரடி சதமடித்து, விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்வது என்ற நெருக்கடியை இந்திய அணி நிர்வாகத்துக்கு கொடுத்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி காம்பினேஷன் என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
undefined
விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாததால், கோலியின் இடத்தில் இறங்கப்போவது யார், பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய 4 தொடக்க வீரர்கள் அணியில் இருக்கும் நிலையில், டெஸ்ட் போட்டியில் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கப்போகும் அந்த இன்னொரு வீரர் யார், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் எது, விக்கெட் கீப்பர் சஹாவா அல்லது ரிஷப் பண்ட்டா என்பன போன்ற கேள்விகள் உள்ளன.
undefined
இதில் முக்கியமான கேள்வி விக்கெட் கீப்பர் யார் என்பதுதான். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமானவை என்பதால் தரமான விக்கெட் கீப்பர் தேவை; எனவே விக்கெட் கீப்பிங்கை கருத்தில்கொண்டு ரிதிமான் சஹாவை எடுப்பதுதான் இந்திய அணியின் திட்டமாக இருந்திருக்கக்கூடும். ஆனால் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அதிரடியாக ஆடி 73 பந்தில் 103 ரன்களை குவித்து தெறிக்கவிட்ட ரிஷப் பண்ட், அணி நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.
undefined
2018ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷப் பண்ட், 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் இடம்பெற்று ஆடினார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதாலும், அதன்பின்னர் போகப்போக பேட்டிங்கிலும் சொதப்பியதாலும், டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார். சீனியர் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா தான் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்துவருகிறார்.
undefined
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டிலும் சஹா தான் விக்கெட் கீப்பராக எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி போட்டியில், ரிதிமான் சஹாவிற்கு முன் வரிசையில் பேட்டிங் ஆடிய ரிஷப் பண்ட், சஹாவிற்கு பேட்டிங் வாய்ப்பே கிடைக்காத அளவிற்கு அதிரடியாக ஆடி 73 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 103 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். தனது அதிரடி பேட்டிங்கின்மூலம் அணி நிர்வாகத்துக்கு விக்கெட் கீப்பராக யாரை எடுப்பது என்ற நெருக்கடியை கொடுத்துள்ளார் ரிஷப்.
undefined
இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால், இந்தியாவில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ரிதிமான் சஹாவிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மற்றபடி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் ஆடும்போது ரிஷப் பண்ட்டுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்றாலும், அண்மையில் ரிஷப் பண்ட்டின் மோசமான ஃபார்மால் தான், அவர் அணியில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தான் இன்னும் சோடை போகவில்லை என்பதை நிரூபித்துள்ளார் ரிஷப் பண்ட்.
undefined
click me!