ஜெய்ப்பூரில் விஜய் ஹசாரே டிராபியில் கோவாவுக்கு எதிராக மகாராஷ்டிராவுக்காக 131 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 134 ரன்கள் எடுத்ததன் மூலம் ருத்ராஜ் இந்த சாதனையை எட்டினார்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சில நாட்களில், மகாராஷ்டிராவின் ருதுராஜ் கெய்க்வாட் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சராசரி கொண்ட பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
அவரது சிறப்பான சராசரியான 58.83, ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவனின் 57.86 சராசரியை முறியடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சராசரி அடிப்படையில் முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேனாக அவரை உயர்த்தியுள்ளது.
24
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சூப்பர் சாதனை
ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் வியாழக்கிழமை கோவாவுக்கு எதிராக மகாராஷ்டிராவுக்காக 131 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 134 ரன்கள் எடுத்ததன் மூலம் ருத்ராஜ் இந்த சாதனையை எட்டினார்.
இவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 102.20 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 5,060 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 99 இன்னிங்ஸ்களில் 20 லிஸ்ட் ஏ சதங்கள் மற்றும் 5,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற வரலாற்றையும் கெய்க்வாட் படைத்துள்ளார்.
34
சதத்திலும் சமன்
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்திருந்த கெய்க்வாட், நடப்பு சீசனில் தனது இரண்டாவது சதத்தை அடித்து, அங்கித் பவ்னேவின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 15 சதங்களுடன் இந்த தொடரின் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.
பவ்னே 101 போட்டிகளில் இந்த சதங்களை எட்டிய நிலையில், கெய்க்வாட் வெறும் 59 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
கெய்க்வாட்டின் சீரான ஆட்டம் அவரது சதங்களில் மட்டுமல்ல, அனைத்து வடிவங்களிலும் அவரது புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கிறது. 59 VHT போட்டிகளில், கெய்க்வாட் 65.41 என்ற அற்புதமான சராசரி மற்றும் 105.00 ஸ்ட்ரைக் ரேட்டில் 3336 ரன்கள் எடுத்துள்ளார். கெய்க்வாட்டின் 131 பந்துகளில் 134 ரன்கள் (8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) சூப்பர் இன்னிங்ஸ் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.