திலக் வர்மா இந்தியாவின் டி20 அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளார். இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து வர்மா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நாளை ஹைதராபாத் திரும்ப உள்ளார்.
அவர் தற்போது சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் இருக்கிறார். அவரது அறிகுறிகள் முழுமையாகத் தீர்ந்து, காயம் திருப்திகரமாக ஆறியவுடன், வர்மா மீண்டும் உடற்பயிற்சியைத் தொடங்கி, படிப்படியாக திறன் சார்ந்த நடவடிக்கைகளுக்குத் திரும்புவார்.
இந்திய அணியின் ஸ்டார் வீரர்
நியூசிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பது, பயிற்சி மற்றும் திறன் நிலைகளுக்குத் திரும்பும் போது அவரது முன்னேற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
கடந்த ஆண்டில் இந்திய டி20 அணியில் வர்மா ஒரு முக்கிய பேட்டராக இருந்து வருகிறார். இந்திய அணியின் ஆசிய கோப்பை 2025 வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 69* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.