Published : Aug 20, 2024, 12:19 PM ISTUpdated : Aug 20, 2024, 12:21 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது தலைமையின் கீழ் பல வெற்றிகளை குவித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். உலகக் கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என பல கோப்பைகளை வென்று, கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது தனது குடும்பத்துடன் இயற்கை எழில் சூழ்ந்த பண்ணை வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்திய அணியின் சொத்தாக இருந்தவர் எம்.எஸ்.தோனி. ஆரம்பத்தில் நீண்ட தலைமுடியுடன் ஒரு விக்கெட் கீப்பராக அறிமுகமான தோனி, தனது திறமையின் மூலமாக இக்கட்டான போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். எம்.எஸ்.தோனிக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று கிரிக்கெட் பற்றிய மதி நுட்பம், எதையும் துல்லியமாக கணிக்கும் கணிப்பு, மின்னல் வேகம் ஆகியவற்றின் மூலமாக இந்திய அணிக்கு அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்தார்.
214
MS Dhoni Luxury House
கபில் தேவ் 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். இதையடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதே போன்று 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. மேலும், 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்தார்.
314
MS Dhoni Farmhouse
தோனிக்கு பிறகு அண்மையில் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், எம்.எஸ்.தோனி தனை சுற்றி இயற்கை அழகு நிறைந்திருக்கும் வகையிலும் வண்ணமையமான சொகுசு பங்களாவை பார்த்து பார்த்து கட்டியிருக்கிறார். ஒரு ராஜாவை போன்ற வாழ்க்கையை வாழ்கிறார். கோவிட் லாக்டவுன் காலத்தில் ராஞ்சியிலுள்ள ஆடம்பரமான பண்ணை வீட்டிற்கு மாறினார்.
414
Dhoni Farmhouse
எம்.எஸ்.தோனியின் இந்த வீடு கைலாசபதி என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டின் பரப்பளவு மட்டும் 7 ஏக்கர். இந்த வீடு கட்டுவதற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது. பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கும் தோனியின் இந்த பண்ணை வீடானது அழகையும், அமைதியையும் கொண்டுள்ளது.
514
Indian Cricket Team
வசதிகள்:
தோனியின் இந்த வீட்டில் அதிநவீன உடற்பயிற்சி கூடம் உள்ளது. திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளமானது மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனத்தை பார்க்கும் ஒரு அமைதியான உணர்வை தருகிறது. ஒரு புறம் தோட்டமும், மறுபுறம் பசுமையால் சூழப்பட்டுள்ளது.
614
Mahendra Singh Dhoni
வெளிப்புறம்:
கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனியின் இந்த வீட்டின் வெளிப்புறம் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சாய்வான கூறை, வெள்ளை நிறத்தில் கறுப்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. கான்கிரீட் மற்றும் கண்ணாடி உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடகலைக்கு ஒரு உன்னதமான சான்று, சாய்வான கூரை மற்றும் கருப்பு ஓடுகள் தான்.
714
MS Dhoni House
கண்ணாடி வளாகம்:
தோனியின் இந்த ஃபார்ம் ஹவுஸ் கண்ணாடி சுவர்களால் ஆனது. சாய்வான கூரை அமைப்பும் உள்ளது. இந்த கண்ணாடி வளாகத்தில் தான் தோனி தனது பழைய கார்கள், கவாஸகி நின்ஜா ஹெச்2, ஹார்லி டேவிட்சன் பேட்பாய், ஹெல்கேட் எக்ஸ்32 போன்ற பைக்குகளை வைத்திருக்கிறார்.
814
MS Dhoni Farmhouse
பசுமை சூழல்:
தோனி இயற்கை ஆர்வலர் என்பது இந்த வீட்டைப் பார்த்தால் தெரியும். இயற்கையான தோட்டங்கள், அழகான சிட் அவுட் இடங்களுடன் சொகுசு வீடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்பங்கள், நண்பர்களை சந்தித்து பேசுவதற்கு பார்பிக்யூ இடம் ஒன்று உள்ளது. இந்த பசுமையான சூழலில் தான் தோனி தனது வளர்ப்பு பிராணிகளுடன் கொஞ்சி விளையாடுவார்.
914
MS Dhoni Organic Farming
வெளிப்புற விளையாட்டு கூடம்:
தோனியின் இந்த சொகுசு பங்களா வீட்டின் வெளிப்புற தோட்டத்தில் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருது பெறுபவர்கள் தொடர்ந்து இருக்க பயிற்சி களம் ஒன்றும் உள்ளது.
1014
Dhoni Home Decor
அருமையான நுழைவு வாயில்:
வாசலிலிருந்து வீட்டிற்கு செல்லும் பாதையானது பெரிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றி சுற்றி சிறிய தோட்டங்கள் உள்ளன.
1114
MS Dhoni Luxury Home
பிரமிக்க வைக்கும் உட்புறங்கள்:
வீட்டிற்கு உட்புறத்தில் பூச்செடிகள் உள்ளன. அதோடு மரம் மற்றும் பளிங்கு தரையும் உள்ளது. சோபா பழுப்பு நிறம் கொண்டுள்ளது. படுக்கையறையில் பழுப்பு நிற தலையணை உள்ள்து. இது வீட்டிற்கு ஒரு அமைதியான சூழலை உருவாக்கி தருகிறது.
1214
MS Dhoni Ranchi House
விளக்குகள்:
இந்த வீட்டிற்கு லைட் வெளிச்சம் தேவையில்லை. இயற்கையிலேயே நாள் முழுவதும் சூரிய ஒளியில் எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1314
MS Dhoni Kailashpati House
விவசாய ஆர்வம்:
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, தர்பூசணி, மற்றும் பப்பாளி போன்ற பழங்களையும், பட்டாணி, கேப்சிகம் போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு வளர்க்கிறார். மேலும் கோதுமையு பயிரிடுகிறார். அதோடு கோழி மற்றும் கறவை மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
1414
MS Dhoni House
வளர்ப்பு பிராணி மீது காதல்:
தோனி வளப்பு பிராணி மீது காதல் கொண்டவர். தனது வீட்டில் சாம் (பெல்ஜிய மாலினோயிஸ்), லில்லி மற்றும் கப்பார், இரண்டு வெள்ளை ஹஸ்கிகள் மற்றும் சோயா என்று 4 செல்ல நாய்கள் உள்ளன. தோனி தனது நாய்கள் பயிற்சி செய்வதையும் மற்றும் விளையாடவும் அனுமதிக்கிறார். வளர்ப்பு பிராணிகள் விளையாட மற்றும் ஓய்வு எடுக்க போதுமான இட வசதியும் உள்ளது. அதோடு 2 குதிரைகளையும் தத்தெடுத்துள்ளார். அவற்றில் ஒன்று தான் சேடக்.