Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 45ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 200 ரன்கள் குவித்தது. ஜிடி அணியில் முதலில் களமிறங்கிய விருத்திமான் சகா 5 ரன்களிலும், சுப்மன் கில் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match
அடுத்து வந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் ஷாருக் கான் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது முதல் அரைசதம் ஆகும்.
Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match
அதன் பிறகு வந்த டேவிட் மில்லர் ஓரளவு ரன்கள் சேர்த்தார். மறுபுறம் கடைசி வரை அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ், ஸ்வப்னில் சிங், கிளென் மேக்ஸ்வேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match
பின்னர் கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match
இன்னும் சொல்லப் போனால், பவுண்டரியை விட அதிகளவில் சிக்ஸர்கள் விளாசினர். இதில், வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 5 பவுண்டரி உள்பட 100 ரன்கள் குவித்து தனது முதல் ஐபிஎல் சதம் அடித்து சாதனை படைத்தார்.
Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match
அதோடு, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தார். முதலிடத்தில் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். கடைசியாக ஆர்சிபி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 206 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி 44 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match
இந்த வெற்றியின் மூலமாக ஆர்சிபி விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட்கோலி, ஃபாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், அஜத் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்.
Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் (சகா), சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், அஸ்மதுல்லா உமர்சாய், ராகுல் திவேதியா, ஷாருக்கான், ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா.