தமிழக வீரர்களான ஷாருக்கான், சாய் சுதர்சன் அதிரடி – குஜராத் டைட்டன்ஸ் 200 ரன்கள் குவிப்பு!

First Published | Apr 28, 2024, 6:29 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 45ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்துள்ளது.

Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 45ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 200 ரன்கள் குவித்தது. ஜிடி அணியில் முதலில் களமிறங்கிய விருத்திமான் சகா 5 ரன்களிலும், சுப்மன் கில் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match

அடுத்து வந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் ஷாருக் கான் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது முதல் அரைசதம் ஆகும்.

Tap to resize

Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match

அதன் பிறகு வந்த டேவிட் மில்லர் ஓரளவு ரன்கள் சேர்த்தார். மறுபுறம் கடைசி வரை அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match

இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ், ஸ்வப்னில் சிங், கிளென் மேக்ஸ்வேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Gujarat Titans vs Royal Challengers Bengaluru, 45th Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட்கோலி, ஃபாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், அஜத் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்.

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமான் (சகா), சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், அஸ்மதுல்லா உமர்சாய், ராகுல் திவேதியா, ஷாருக்கான், ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா.

Latest Videos

click me!