22 போட்டிகளுக்கு பிறகு முதல் அரைசதம் அடித்த துருவ் ஜூரெல் – பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்த தருணம்!

First Published | Apr 28, 2024, 1:36 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்த 44ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜூரெல் 22 போட்டிகளுக்கு பிறகு தனது முதல் அரைசதத்தை பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் பிறந்தவர் துருவ் ஜூரெல். தற்போது 23 வயதாகும் ஜூரெல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். ரூ.20 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ஜூரெல் கடந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாடி 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

இதில், அதிகபட்சமாக 34* ரன்கள் எடுத்தார். இதையடுத்து, நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரில் 8 போட்டிகள் வரை விளையாடி 50 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நிலையில் தான் நேற்று நடந்த லக்னோவிற்கு எதிரான 44ஆவது லீக் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். இது அவரது 22ஆவது போட்டி.

Tap to resize

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் அதிகபட்சமாக 76 ரன்களும், தீபக் கூடா 50 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு ரியான் பராக் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

கடையில் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இந்தப் போட்டியில் துருவ் ஜூரெல் அபாரமாக விளையாடிய தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

வெற்றிக்கு தனது பெற்றோருடன் தனது அரைசதத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!