Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 44ஆவது லீக் போட்டியில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 76 ரன்கள் எடுத்தார்.
LSG vs RR, 44th IPL Match
இதே போன்று தீபக் கூடா 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் 35 ரன்கள் எடுத்திருந்த போது தொடக்க வீரராக 4000 ரன்களை கடந்த 5ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 94 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஷிகர் தவான், டேவிட் வார்னர், விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match
இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதில், 9 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் மொத்தமாக 354 ரன்கள் எடுத்துள்ளார்.
Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்த வரையில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.
KL Rahul
ஜோஸ் பட்லர் 34 ரன்களில் ஆட்டமிழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் ஜோடி சேர்ந்தனர். எனினும், ரியான் பராக் 14 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து கேப்டனுடன் துருவ் ஜூரெல் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டினார். இதில் ஜூரெல் 31 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று சாம்சனும் தனது 25 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match
கடைசி வரை அதிரடியாக விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், ஜூரெல் 52 ரன்னும், சாம்சன் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ராஜஸ்தான் விளையாடிய 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பிளே ஆஃப் வாய்ப்பும் கிட்டத்தட்டு உறுதியாகிவிட்டது. இன்னும், ஓரிரு போட்டிகளில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்
Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match
லக்னோ இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்த 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஆனால், கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விளையாடிய 15 போட்டிகளில் 12ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டவில்லை.