திருமணத்திற்கு முன் ரித்திகா சஜ்தே, விராட் கோலி இருவரும் டேட்டிங்கில் இருந்தார்களா?

Published : Apr 21, 2024, 02:52 PM ISTUpdated : Apr 21, 2024, 02:56 PM IST

ரோகித் சர்மாவின் மனைவியான ரித்திகா படித்து முடித்த பிறகு, கார்னர்ஸ்டோன் என்ற நிறுவனத்தின் மூலமாக விராட் கோலியின் மேனேஜராக இருந்துள்ளார்.

PREV
17
திருமணத்திற்கு முன் ரித்திகா சஜ்தே, விராட் கோலி இருவரும் டேட்டிங்கில் இருந்தார்களா?
Rohit Sharma, Ritika Sajdeh

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி. ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

27
Rohit Sharma and Ritika Sajdeh

இதில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

37
Rohit Sharma and His Wife Ritika Sajdeh

பொதுவாகவே கிரிக்கெட் வீரர்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்படி தான் ரோகித் சர்மாவின் மேனேஜராக இருந்த ரித்திகாவும் முதல் முதலாக கடந்த 2008 ஆம் தேதி சந்தித்துள்ளனர்.

47
Rohit Sharma Family

அதன் பிறகு நண்பர்களாக தங்களது பயணத்தை தொடங்கி அதன் பிறகு வாழ்க்கை பார்ட்னராக இணைந்துள்ளனர். இவர்களது திருமணம் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மும்பையில் நடந்துள்ளது. இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி சமைரா பிறந்தாள்.

57
Virat Kohli, Rohit Sharma and Ritika Sajdeh

ஆனால், திருமணத்திற்கு முன்னதாக விராட் கோலியின் மேனேஜராக ரித்திகா இருந்துள்ளார். மேலும், விராட் கோலி, சஜ்தேயின் குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் ரித்திகாவின் சகோதரர் பண்டி சஜ்தே அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மற்றும் முன்னாள் மேலாளர் ஆவார்.

67
Rohit Sharma and Ritika Sajdeh

பல ஆண்டுகளாக விராட் கோலியின் மேனேஜராக இருந்ததால் என்னவோ ரித்திகா சஜ்தே அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இருவரும் ஹோட்டல்கள், தியேட்டர் என்று வெளியில் வரும் போது பல முறை கேமராவில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக இருவரும் டேட்டிங் சென்றதாக அப்போது வதந்தி பரவியது. இது வெறும் வதந்தியாகவே இருந்தது. இருவரும் இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

77
Virat Kohli and Ritika Sajdeh

அதன் பிறகு ரோகித் சர்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு சமைரா என்ற மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தி செய்தி வெளியாகி வரும் நிலையில் இது குறித்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கருத்து தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது. தற்போது இருவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிஸியாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories