பவர்பிளேயில் அதிக ரன்கள்: ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடித்த சிஎஸ்கே, மும்பை, ஹைதராபாத் அணிகளின் பட்டியல்!

First Published | Apr 21, 2024, 11:09 AM IST

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் 2024 கிரிக்கெட்டின் 35ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 125 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தது.

Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே அதிரடி, சுவாரஸ்யம், சாதனைகள் என்று எல்லாமே இருக்கும். அப்படி ஒரு போட்டி தான் நேற்று நடந்தது. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 35ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 266/7 ரன்கள் குவித்தது.

Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி 6 ஓவர்களில் 125 ரன்கள் குவித்தனர். முதல் 10 ஓவர்களில் ஹைதராபாத் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. இதில், டிராவிஸ் ஹெட் 89, அபிஷேக் சர்மா 46, ஹாபாஸ் அகமது 59* ரன்கள் எடுத்தனர்.

Tap to resize

Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் டேவி வார்னர் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், அடுத்து வந்த ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் அதிரடியாக விளையாடவே டெல்லி 10 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது. கடைசியில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

DC vs SRH,

இந்த நிலையில், பவர்பிளேயில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 அணிகளின் பட்டியல் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க…இந்தப் பட்டியலில் முதலில் இருப்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

DC vs SRH, IPL 35th Match 2024

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேபிடல்ஸ், 2024:

டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 6 ஓவர்களில் 125 ரன்கள் குவித்தனர். இதில் ஹெட் 16 பந்துகளில் அரைதம் அடித்து சாதனை படைத்தார்.

KKR vs RCB, IPL 2027

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2017:

கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி பவர்பிளேயில் விக்கெட் இழக்காமல் 105 ரன்கள் எடுத்தனர்.

CSK vs PBKS, IPL 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் 100/2, - பஞ்சாப் கிங்ஸ் 2014:

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் பிராண்டன் மெக்கல்லம் மற்றும் டுவைன் ஸ்மித் இருவரும் இணைந்து அதிடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதில், சிஎஸ்கே 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் குவித்தது.

CSK vs MI, IPL 2015

சென்னை சூப்பர் கிங்ஸ் 90/0, மும்பை இந்தியன்ஸ், 2015:

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் பிராண்டன் மெக்கல்லம் மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் இணைந்து அதிடியாக விளையாடி 90 ரன்கள் சேர்த்தனர்.

KKR vs DC, IPL 2024

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 88/1, டெல்லி கேபிடல்ஸ், 2024:

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியில் பிலிப் சால்ட், சுனில் நரைன் மற்றும் அங்கிரிஸ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி பவர்பிளேயில் 88 ரன்கள் குவித்தனர்.

Kochi Tuskers Kerala vs Rajasthan Royals, IPL 2011

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா 87/2, ராஜஸ்தான் ராயல்ஸ், 2011:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொச்சி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடவே பவர்பிளேயில் 87 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் கொச்சி அணி வெற்றி பெற்றது.

KKR vs RCB, IPL 2024

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86/0, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2024:

கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி பவர்பிளேயில் 86 ரன்கள் எடுத்தனர்.

PBKS vs SRH, IPL 2014

பஞ்சாப் கிங்ஸ் 86/1, - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2014:

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ஒரு விக்கெட் இழந்து பவர்பிளேயில் 86 ரன்கள் எடுத்திருந்தது.

RR vs SRH, 2023

ராஜஸ்தான் ராயல்ஸ், 85/1, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2023:

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ஒரு விக்கெட் இழந்து பவர்பிளேயில் 85 ரன்கள் எடுத்தனர்.

MI vs DC, 2018

மும்பை இந்தியன்ஸ், 84/0, டெல்லி கேபிடல்ஸ், 2018:

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை பேட்ஸ்மேன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் எவின் லீவிஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி பவர்பிளேயில் 84 ரன்கள் எடுத்தனர்.

DC vs SRH, IPL 2024

டெல்லி கேபிடல்ஸ் 88/2, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2024:

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி பேட்ஸ்மேன்கள் ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் இணைந்து அதிரியாக விளையாடி 2 விக்கெட்டுகளை இழந்து பவர்பிளேயில் 88 ரன்கள் எடுத்தனர்.

Latest Videos

click me!