ஒரே வாரத்தில் இருவரும் ஐசிசி ரேங்க்கில் இருந்து இருவரும் நீக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனால், இவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. இந்த தரவரிசையில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆசம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இலங்கையின் சரித் அசலங்க ஆகியோர் மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஓய்வு பெற்று விட்டனரா?
ரோகித் சர்மா மற்றும் கோலியின் பெயர்கள் இல்லாதது, இவர்கள் ஓய்வு அறிவித்துவிட்டதாக ஐசிசி கருதியதா, அல்லது தொழில்நுட்ப பிழையா என்ற கேள்விகளை எழுப்பியது. ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 வடிவத்திலிருந்தும், 2025 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் இவர்கள் விலகினர்.
தற்போது, ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே இவர்கள் விளையாடும் ஒரே சர்வதேச வடிவமாக உள்ளது. இந்நிலையில், ஐசிசி தரவரிசையில் இவர்களின் பெயர்கள் இல்லாதது, இவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற உள்ளனர் என்ற புரளியை தூண்டியது.