தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 'ஹிட்மேன்' ரோகித் சர்மா அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் ஓடிஐ கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து வந்த நிலையில் அதற்கும் பிசிசிஐ வேட்டு வைத்தது. அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ தொடரில் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
24
3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர்
இதனால் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு வீரராக விளையாடிய ரோகித் சர்மா, 3 போட்டிகளில் ஒரு சதமும், ஒரு அரை சதமும் விளாசி அசத்தினார். இப்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், இது முடிந்தவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.
34
சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம்
இந்திய அணியின் ஓடிஐ மற்றும் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் கழுத்து தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மட்டுமின்றி ஓடிஐ தொடரிலும் பங்கேற்பது சந்தேகம் தான். மேலும் இந்திய அணியின் ஓடிஐ துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விலா எலும்பு காயம் காரணமாக ஓடிஐ அணியில் இடம்பெற மாட்டார்.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடரில் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக அவரிடம் பேசி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனாலும் ரோகித் சர்மா மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்வாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. மீண்டும் கேப்டன் பதவி கொடுத்தால் ரோகித் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.