இந்தியாவுக்குப் பின்னால் பாகிஸ்தான் உள்ளது. இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 50 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்ற பாகிஸ்தான், இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தது. ஐந்து போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து ஆறாவது இடத்தில் உள்ளது. தலா இரண்டு வெற்றி, தோல்விகளுடன் ஒரு போட்டியை சமன் செய்துள்ளது. இங்கிலாந்து 43.33 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்குப் பின்னால் உள்ள வங்கதேசம் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 16.67 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் எந்தப் புள்ளியும் பெறவில்லை. நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.