தோனியை ஓவர்டேக் செய்த ரோகித் சர்மாவுக்கு விருது!

Published : Feb 21, 2023, 10:20 AM IST

ரோகித் சர்மா, விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ் ஆகியோர் உள்பட பலருக்கும் Star Sports உருவாக்கிய Incredible Premier League Awards விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.  

PREV
16
தோனியை ஓவர்டேக் செய்த ரோகித் சர்மாவுக்கு விருது!
ஐபில்

ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசன் தொடங்கப்பட்டது. தற்போது 10 அணிகள் இடம் பெற்றுள்ள ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 25ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 

26
ரோகித் சர்மா

இந்த நிலையில், தனது 15 ஆண்டுகால சாதனையை கொண்டாடும் வகையில் Incredible Premier League Awards என்ற பெயரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விருதுகள் வழங்கியுள்ளது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5 முறை சாம்பியன் பட்டத்தையும், ஒரு முறை 2ஆவது இடமும் மும்பை இந்தியன்ஸ் அணி பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

36
ஏபி டிவில்லியர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சிறந்த பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸுக்கு சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பந்து வீச்சாளராக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

46
விராட் கோலி

ஒரேயொரு சீசனில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் 4 சதங்கள் உள்பட 973 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

56
சுனில் நரைன்

இதே போன்று சிறந்த பந்து வீச்சாளராக கொல்கத்தா அணியின் சுனில் நரேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சுனில் நரேன் 15 இன்னிங்ஸில் 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

66
ஆண்ட்ரே ரஸல்

இதன் மூலமாக அந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் டிராபியை கைப்பற்றியது. இதே போன்று கடந்த 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது. ஒட்டு மொத்தமாக சிறப்பாக செயல்பட்ட வீரர் விருதுக்கு கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories