இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார் மைக்கேல் கிளார்க். இதுகுறித்து பேசிய மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய அணியின் தோல்வியில் எனக்கு வியப்பே இல்லை. ஒரு பயிற்சி போட்டியிலாவது ஆடியிருந்தால் தான் கண்டிஷனை புரிந்துகொள்ள முடியும். பயிற்சி போட்டியில் ஆடாதது மிகப்பெரிய தவறு. அடுத்தது, அணி தேர்வு. முதல் டெஸ்ட்டில் அணி தேர்வும் தவறாகவே இருந்தது. 2வது டெஸ்ட்டில் கண்டிஷனை நன்கு தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே தொடக்கத்திலேயே ஸ்பின்னிற்கு எதிராக ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை ஆடியது தவறு. ஆஸ்திரேலிய அணியின் வியூகங்களுக்கு என்னாயிற்று என்று எனக்கு தெரியவில்லை. வெறும் 100+ (113) ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெறும் இரண்டரை நாட்களில் போட்டி முடிந்துவிட்டது. என்று கிளார்க் விமர்சித்திருந்தார்.