இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டியிலும் ஜெயித்தால், இந்திய அணி தொடரை வெல்வதுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தை பிடித்துவிடும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில் காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். அவர் காயம் குணமடையாததால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி டெஸ்ட் பவுலரான ஜோஷ் ஹேசில்வுட், 59 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 222 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேவேளையில், காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் காயத்திலிருந்து மீண்டதால் வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் தொடங்கும் 3வது டெஸ்ட்டில் அவர்கள் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.