
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 17 ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடி 263 ரன்கள் குவித்தது. இதில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஷமி 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் ரோகித் சர்மா 32, விராட் கோலி 44, அக்ஷர் படேல் 74 ரன்கள் சேர்க்க இந்தியா 262 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 139 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த இந்திய அணியில் 8ஆவது விக்கெட்டிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி 114 ரன்கள் வரையில் எடுத்தது. அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், டிரேவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். எனினும், டிரேவிஸ் ஹெட் 43 ரன்னிலும், லபுஷேன் 35 ரன்களும் எடுத்து ஆடடமிழந்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ரவீந்திர ஜடேஜா 12.1 ஓவர்கள் வரை வீசி ஒரேயொரு மெய்டன் மட்டுமே போட்டு 7 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை சரித்துள்ளார். அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்ற ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.
எளிய இலக்கை நோக்கிய விளையாடிய இந்திய அணிக்கு தொடர்ந்து சொதப்பி வரும் கேஎல் ராகுல் இந்த முறையும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரோகித் சர்மாவும் 31 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டில் வெளியேறினார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 20 ரன்கள் சேர்த்த நிலையில், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதன் மூலமாக வரலாற்றில் இடம் பெற்றார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி ஸ்டெம்பிங் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதே போன்று ரோகித் சர்மாவும் வரலாற்றில் இடம் பிடித்தார். அவர் 31 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி இந்த டெஸ்டில் 52 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று சொல்லப்பட்டது.
தற்போது முதல் இன்னிங்ஸில் 44 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 20 ரன்களும் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 25000 ஆயிரம் எடுத்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
விராட் கோலி 549 இன்னிங்ஸ் - 492 போட்டிகள் 25003 ரன்கள்
சச்சின் டெண்டுல்கர் 577 இன்னிங்ஸ் - 664 போட்டிகள் 34357 ரன்கள்
ரிக்கி பாண்டிங் - 588 இன்னிங்ஸ் - 560 போட்டிகள் 27483 ரன்கள்
ஜாக் காலிஸ் - 594 இன்னிங்ஸ் - 519 போட்டிகள் 25534 ரன்கள்
குமார் சங்கக்கரா - 608 இன்னிங்ஸ் - 594 போட்டிகள் 28016 ரன்கள்
மஹேலா ஜெயவர்தனே - 701 இன்னிங்ஸ் - 652 போட்டிகள் 25957 ரன்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ரன் அவுட் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழந்து 118 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. இதில், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 23 ரன்னுடனும், சட்டீஸ்வர் புஜாரா 31 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலமாக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.