எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் என் பதில்..! ரோஹித் சர்மா அதிரடி

First Published | Nov 22, 2020, 9:03 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது பேட்டிங் ஆர்டர் குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஆரம்பத்தில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா எடுக்கப்படவில்லை.
ஆனால் விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், இந்தியாவிற்கு திரும்ப இருப்பதால், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா எடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தனது இடத்தை ரோஹித் சர்மா தக்கவைத்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் கேஎல் ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இடம்பெற்றிருப்பதால், ரோஹித் சர்மா எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்குவார் என்ற கேள்வி எழுந்தது.
Tap to resize

விராட் கோலி ஆடாத போட்டிகளில் அவரது பேட்டிங் ஆர்டரான 4ம் வரிசையில் இறங்குவாரா, அல்லது ரோஹித் தொடக்க வீரராக இறங்கிவிட்டு, ராகுல் 4ம் வரிசையில் இறங்குவாரா என்பது கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், பேட்டிங் ஆர்டர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். அதையே தான் இப்போதும் சொல்கிறேன். அணி நிர்வாகம் என்னை எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்க சொன்னாலும் மகிழ்ச்சியுடன் இறங்குவேன். ஆனால் அணி நிர்வாகம் ஓபனரான எனது ரோலை மாற்றுமா என தெரியவில்லை. விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரில் யாரை இறக்குவது மற்றும் தொடக்க வீரர்கள் யார் யார் என்பது இந்நேரம் முடிவு செய்யப்பட்டிருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!