இந்திய அணியில் மிகப்பெரிய ஓட்டை; ஆனால் அதிலும் ஒரு நன்மை - இயன் சேப்பல்

First Published Nov 22, 2020, 3:16 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய ஓட்டை குறித்தும், அதில் இருக்கும் ஒரு நன்மை குறித்தும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
 

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் ஒருநாள் தொடர், அதன்பின்னர் டி20 தொடர், கடைசியாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.
undefined
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடுகிறார். அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். விராட் கோலி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
undefined
விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து பேசியுள்ள இயன் சேப்பல், விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் இந்தியாவிற்கு திரும்புவதால், இந்திய அணி தேர்வு கடும் சவாலானதாக இருக்கும். விராட் கோலி ஆடாதது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மிகப்பெரிய ஓட்டை. ஆனால் அதேவேளையில் கோலி ஆடாதது, இளம் வீரர் ஒருவருக்கு இந்திய அணியில் ஆடுவதற்கான வாய்ப்பாகவும், திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகவும் அமையும். எனவே இந்திய அணி தேர்வு தான் கடினமானதாக இருக்கும் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
undefined
click me!