கேப்டன் பொறுப்பை ரோஹித்திடம் ஒப்படைக்கணும்..! கோலிக்கு அழுத்தம் போடும் முன்னாள் கேப்டன்

First Published | Nov 21, 2020, 6:31 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பை கோலி ரோஹித்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.
 

இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான அணிகளுக்குமே விராட் கோலி தான் கேப்டனாக உள்ளார். இந்திய அணியின் கேப்டனான கோலி, ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்கு இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை.
ஆனால் அதேவேளையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை வென்றுகொடுத்துள்ளார். அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் தான். அதுமட்டுமல்லாது, இந்திய அணியின் கேப்டனாகவும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபித்துள்ளார்.
Tap to resize

எனவே இந்திய டி20 அணியின் கேப்டன்சி பொறுப்பை ரோஹித்திடம் கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் ஏற்கனவே இருந்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அது வலுத்த நிலையில், ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர், மேலும் வலுத்தது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், ரோஹித் கூலான, அமைதியான, நிதானமான கேப்டன். சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் கேப்டன். விராட் கோலி இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, ரோஹித்திடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைக்க இதுவே சரியான நேரம். ரோஹித்தின் கேப்டன்சி ரெக்கார்டே அவர் எப்பேர்ப்பட்ட கேப்டன் என்பதை பறைசாற்றும் என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!