ஐபிஎல் 2023
ஐபிஎல் கிரிககெட் திருவிழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.
ரோகித் சர்மா
இதுவரையில் சென்னை மற்றும் மும்பை மோதிய போட்டிகளில் மும்பை இந்தின்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் நடந்த 34 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிஙஸ் அணி 14 போட்டிகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
அதுமட்டுமின்றி மும்பை வான்கடே மைதானைத்தில் சென்னைக்கு எதிராக நடந்த 10 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்த 5 போட்டிகள் முறையே:
சென்னை - மும்பை
கடந்த 2022, மே 12: மும்பை இந்தியன்ஸ் 103/5, சென்னை சூப்பர் கிங்ஸ் 97/10 - மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
2022, ஏப்ரல் 21: சென்னை சூப்பர் கிங்ஸ் 156/7, மும்பை இந்தியன்ஸ் 155/7, சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
2021, செப்டம்பர் 19, சென்னை சூப்பர் கிங்ஸ் 156/7, மும்பை இந்தியன்ஸ் 136/8, சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
ரோகித் சர்மா
2021 மே, 01: மும்பை இந்தியன்ஸ் 219/6, சென்னை சூப்பர் கிங்ஸ் 218/4 - மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
2020, அக்டோபர் 23: மும்பை இந்தியன்ஸ் 116/0, சென்னை சூப்பர் கிங்ஸ் 114/9 - மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
மும்பை இந்தியன்ஸ்
இதற்கு முன்னதாக பெங்களூருவில் நடந்த 2023 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசனுக்கான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இன்று மும்பையில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை வான்கடே ஸ்டேடியம்
ஏற்கனவே சென்னை அணியில் டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, எம் எஸ் தோனி என்று ஒவ்வொருவரும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கின்றனர். ஆனால், மும்பை அணியில் இஷான் கிஷான், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங் சொதப்பி வரும் நிலையில், அதிலிருந்து மீண்டு வந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
ரோகித் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, வான்கடே மைதானத்தில் 87, 60, 39*, 19, 50, 19, 15, 13, 18 என்று ரோகித் சர்மா ரன்கள் சேர்த்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிராக 9 போட்டிகளில் 320 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6 ஐபிஎல் போட்டிகளில் மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில், மும்பை 3 முறையும், சென்னை 3 முறையும் வென்றுள்ளது.