சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுப்பேன் என்று ரோகித் சர்மா சொல்லியிருக்கிறார்: பயிற்சியாளர் தினேஷ் லாட்!

Published : Mar 09, 2025, 08:01 PM ISTUpdated : Mar 09, 2025, 08:02 PM IST

Rohit Sharma's Coach Dinesh Lad : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுப்பேன் என்று ரோகித் சர்மா சொல்லியிருப்பதாக அவரது முன்னாள் பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறியிருக்கிறார்.

PREV
15
சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுப்பேன் என்று ரோகித் சர்மா சொல்லியிருக்கிறார்: பயிற்சியாளர் தினேஷ் லாட்!

ICC Champions Trophy 2025 Final : இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் முன்னாள் பயிற்சியாளர் தினேஷ் லாட், நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று உறுதியாக சொல்லியிருக்கார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக பேசிய அவர், ரோகித் சர்மா டிராபிய கண்டிப்பாக வீட்டிற்கு கொண்டு வருவதாக என்னிடம் உறுதி அளித்திருக்கிறார் என்று கூறினார். இந்திய அணியின் மொத்த திறமையை பாராட்டி பேசினார். கிரிக்கெட் தனிப்பட்ட திறமை மட்டும் இல்ல, அது ஒரு குழு முயற்சி என்றும் சொன்னார்.

25
ICC Champions Trophy 2025 Final, Champions Trophy 2025 Final

"கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு, அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். ரோகித் வாழ்க்கையில முக்கியமான ரோல் பண்ணின லாட், இந்திய கேப்டன் ஓடிஐ கிரிக்கெட்டில் இன்னும் நன்றாக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதாவது, 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடிய பிறகு அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்போது தான் அவரால் இன்னும் நிறைய சாதிக்க முடியும். இந்தியா மற்றொரு ஐசிசி டிராபியை கைப்பற்ற காத்துக் கொண்டிருக்கிறது. நியூசிலாந்து எவ்வளவு கடினமான இலக்கை எட்டினாலும் இந்தியா தான் ஜெயிக்கும். அதைத் தான் எல்லோருமே விரும்புகிறார்கள்.

35
Kuldeep Yadav, Varun Chakaravarthy

இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும், நியூசிலாந்து பவுலிங் மற்றும் பேட்டிங்க் இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. மிட்செல் சான்ட்னர் கேப்டன்சில நல்லா விளையாடிட்டு இருக்காங்க.

2000 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு அப்புறம் இந்த போட்டி ரொம்ப பெருசா இருக்கும்னு எதிர்பார்க்கலாம். அந்த மேட்ச்சுல நியூசிலாந்து ஜெயிச்சுட்டாங்க. 2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளாக் கேப்ஸிடம் தோத்ததை திருப்பி கொடுக்க இந்தியா பாக்கும்.

45
New Zealand Cricket Team, Indian Cricket Team

கடைசி வாரம் நடந்த போட்டியில இந்தியா, நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்துல ஜெயிச்சுட்டாங்க. தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து முதலில் விளையாடி 251 ரன்கள் குவித்தது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரேஸ்வெல் 53 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 37 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 34 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் மற்றும் முகமது ஷமி ஒரு விக்கெட் எடுத்தனர்.

55
Rohit Sharma's Coach Dinesh Lad

அணிகள்:

இந்திய அணி: ரோகித் சர்மா (c), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல்(w), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து அணி: வில் யங், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திர, டாம் லாதம்(w), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (c), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ'ரூர்க், டேரில் மிட்செல், நாதன் ஸ்மித், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories