ஐபிஎல் டிமாண்டில் ரோகித் சர்மா - ரூ. 2 கோடி கூட கொடுத்து ரூ.18 கோடிக்கு தக்க வைக்க ஸ்கெட்ச் போடும் Mumbai?

First Published | Oct 14, 2024, 3:01 PM IST

Rohit Sharma Likely to Retained by Mumbai Indians For Rs 18 Crore: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ரோகித் சர்மா வேறு அணிக்குச் செல்வாரா அல்லது மும்பை அணியிலேயே தக்கவைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Rohit Sharma Likely to Retained by Mumbai Indians For Rs 18 Crore

Rohit Sharma Likely to Retained by Mumbai Indians For Rs 18 Crore: மும்பை இந்தியன்ஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரோகித் சர்மாவும், அவரது கேப்டன்ஸி சாதனையும் தான். சிஎஸ்கே அணிக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் டிராபி கைப்பற்றியுள்ளது. அதற்கு முன்னதாக 2ஆவது ஐபிஎல் சீசனில் டிராபி வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியிருக்கிறார்.

IPL 2025, Mumbai Indians, Rohit Sharma Likely to Retained by Mumbai Indians For Rs 18 Crore

கடந்த 2024 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே ரோகித் சர்மாவின் பெயர் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா 2024 ஆம் ஆண்டுக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான பேச்சுகள் அடிபடுகிறது.

Tap to resize

Rohit Sharma and Hardik Pandya

இதில், ரோகித் சர்மா தான் தலைப்புச் செய்தி. எந்த அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை அணியிலேயே கேப்டனாக தொடர்வாரா இல்லை ஆர்சிபி அல்லது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு மும்பை இந்தியன்ஸ் முதலில் ரோகித் சர்மாவை விடுவித்து ஐபிஎல் ஏலத்திற்கு அவர் சென்றால் மட்டுமே இதெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

Mumbai Indians Retained Players

இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மஹேலா ஜெயவர்த்தனே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

Rohit Sharma Likely to Retained by Mumbai Indians For Rs 18 Crore

இவர் தலைமை பயிற்சியாளராக இருந்த போது மும்பை இந்தியன்ஸ் 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் டிராபி வென்றிருக்கிறது. தற்போது அவர் அணிக்கு திரும்பிய நிலையில் மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவாரா? அல்லது கூடுதல் சம்பளத்திற்கு அணியிலேயே தக்க வைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் ரூ.18 கோடிக்கு ரோகித் சர்மா தக்க வைக்கப்பட இருப்பதாக தற்போது செய்தி வெளியாகி வருகிறது.

Mumbai Indians, IPL 2025 Mega Auction

இதற்கு முன்னதாக ரோகித் சர்மா ரூ.16 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஹர்திக் பாண்டியா ரூ.15 கோடிக்கு விளையாடி வருகிறார். ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட வரும் 31 ஆம் தேதி தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma Likely to Retained by Mumbai Indians For Rs 18 Crore

மும்பை இந்தியன்ஸ் அணியில் யாரையெல்லாம் தக்க வைக்கலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளவே மஹேல ஜெயவர்த்தனே மும்பை அணியில் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். இந்திய அணியில் டி20 கிரிக்கெட்டில் இடம் பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா தற்போது சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இதே ஃபார்முடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து இந்த முறை டிராபியை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!