2008 முதல் 2024 வரை ஒரே அணிக்காக விளையாடியவர் கோலி:
2008 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடி வரும் விராட் கோலி, ஏலத்திற்கு சென்றிருந்தால் ஒரு சாதனையை முறியடிக்கும் அளவிற்கு சாதனையை படைத்திருப்பார். ஆனால், இதுவரையில் அவர் ஏலத்திற்கு செல்லவில்லை. இருப்பினும், விராட் கோலி 17 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 173.2 கோடி வரையில் சம்பாதித்திருக்கிறார்.
இதுவரையில் 252 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8004 ரன்கள் குவித்துள்ளார். இதில், 55 அரைசதங்கள் மற்றும் 8 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1050 கோடி ஆகும். அதிகளவில் வருமானம் ஈட்டும் விராட் கோலி ஐபிஎல் மூலமாக ரூ.173.2 கோடி மட்டுமே 17 ஆண்டுகளில் சம்பாதித்துள்ளார். ஆனால், இவர், ஏலத்திற்கு மட்டும் சென்றிருந்தால் இவரது கணக்கே வேறாக இருந்திருக்கும்.
இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பாதித்த இந்திய ஜாம்பவான்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். தோனி 2ஆவது இடமும், விராட் கோலி 3ஆவது இடமும் பிடித்துள்ளனர்.