இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீய பழக்கவழக்கங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் தனது கணவர் மிகவும் ஒழுக்கமானவர் என்றும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களின் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான இவர் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டு, டெஸ்ட் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவரது மனைவி ரிவாபா ஜடேஜா. பாஜகவை சேர்ந்த இவர் குஜராத் மாநில அரசில் அமைச்சராக உள்ளார்.
24
ஜடேஜா ஒழுக்கமானவர்
இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் வெளிநாடு சென்றால் தீய பழக்கவழக்கங்களில் ஈடுபடுகின்றனர் எண்று ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரிவாபா ஜடேஜா, ''எனது கணவர் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் விளையாட லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
34
மற்ற வீரர்களுக்கு தீய பழக்கவழக்கங்கள்
அவர் இன்று வரை எந்த விதமான தீய செயல்களிலும் ஈடுபட்டதில்லை. அவர் தனது பொறுப்புகளைப் புரிந்துகொண்டுள்ளார். 12 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு வெளியே இருக்கும் ஜடேஜா என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அவர் தனது கடமையை புரிந்து நடந்து கொண்டுள்ளார்.
ஆனால் அணியின் மற்ற அனைவரும் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது குடும்பத்தினரிடமிருந்து எந்தத் தடையும் இல்லை. வாழ்க்கையில் நாம் எவ்வளவு உயரத்துக்கு, எந்த இடத்துக்கு சென்றாலும் நமது கலாசாரத்தை மறந்து விடக்க்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்கள் குறித்த ஜடேஜா மனைவியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிவாபா ஜடேஜாவின் கருத்து உண்மையானதா? இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் நாட்டுக்காக விளையாட செல்கிறார்களா? இல்லை வேறு எதுக்கும் செல்கிறார்களா? என்பது குறித்து பிசிசிஐ விசாரணை நடத்த வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே வேளையில் இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து மற்ற விஷயங்கள் அவர்களது தனிப்பட்ட உரிமை. இதில் ரிவாபா ஜடேஜா தலையிடுவது தவறு என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.