14 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து தான் பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில் 4 போட்டிகளில் 239 ரன்கள் குவித்து மலைக்க வைத்திருந்தார். ஒரு ஜெட் வேக சதமும் (144 ரன்கள்) விளாசி இருந்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 433 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளது. இந்திய அணி வீரர் 14 வயதான வைவப் சூர்யவன்ஷி வெறும் 95 பந்துகளில் 171 ரன்கள் விளாசி பிரம்மிக்க வைத்தார். தொடக்கம் முதலே சிக்சர் மழை பொழிந்த வைவப் சூர்யவன்ஷி மொத்தம் 14 சிக்சர்கள் விளாசினார். 14 பவுண்டரிகள் விரட்டினார்.
24
வைபவ் சூரியவன்ஷியின் அதிரடி ஆட்டம்
கேரள வீரர் ஆரோன் ஜார்ஜ் (73 பந்தில் 69 ரன்கள்), விஹான் மல்ஹோத்ரா (55 பந்தில் 69 ரன்கள்) ஆகியோர் அரை சதங்கள் அடித்தனர். தொடக்கத்தில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே (4) ஏமாற்றினாலும் வைபவ் சூரியவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் இந்தியாவின் மகத்தான ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர், 146 பந்துகளில் இரண்டாவது விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்தனர். ஐக்கிய அரபு அமீரக அணி சார்பில் யுக் சர்மா மற்றும் உத்தீஷ் சூரி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
34
தொடர்ந்து கலக்கும் 14 வயது பாலகன்
14 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து தான் பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். அண்மையில் சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியில் பீகார் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் வைபவ் 61 பந்துகளில் 7 சிக்சர்கள், 7 பவுண்டரிளுடன் 108 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் முஷ்டாக் அலி அணியில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
முன்னதாக இவர் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில் 4 போட்டிகளில் 239 ரன்கள் குவித்து மலைக்க வைத்திருந்தார். ஒரு ஜெட் வேக சதமும் (144 ரன்கள்) விளாசி இருந்தார். அதுவும் 32 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இந்த தொடரில் மட்டும் 22 சிக்ஸர்களும் 20 பவுண்டரிகளும் அவர் விளாசி இருந்தார். தொடர்ந்து அதிரடியில் பட்டையை கிளப்பி வரும் வைபவ் சூர்யவன்ஷியை மிக விரைவில் இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.