IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!

Published : Dec 12, 2025, 02:19 PM IST

IND VS SA 3rd T20: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் படுமோசமான பார்மில் உள்ள துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

PREV
15
இந்திய அணி மோசமான தோல்வி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 213 ரன்கள் குவித்தது. குயின்டன் டி காக் சூப்பர் அரை சதம் (46 பந்தில் 90 ரன்கள்) விளாசினார். பின்பு விளையாடிய இந்திய அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திலக் வர்மா (34 பந்தில் 62 ரன்) தனி ஆளாக போராடினார்.

25
சுப்மன் கில் படுமோசமான பேட்டிங்

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் (5), துணை கேப்டன் (0) சுப்மன் கில் தொடர்ந்து படுமோசமாக பேட்டிங் செய்தனர். அதுவும் சுப்மன் கில் இந்த ஆண்டு விளையாடிய 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 23 சராசரி மற்றும் 143.71 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 263 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மிக மட்டமாக பேட்டிங் செய்து வரும் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்குவது ஏன்? என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலர் பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

35
சஞ்சு சாம்சனுக்கு எழும் ஆதரவு

சுப்மன் கில்லுக்கு பதிலாக கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி பேட்டிங் செய்து வரும் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி வரும் 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் நடைபெற உள்ளது.

சுப்மன் கில் அதிரடி நீக்கம்

3வது டி20 போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று 2வது டி20 போட்டியில் கில் டக் அவுட் ஆனவுடன் கவுதம் கம்பீரின் முகமே மாறியது. கில்லின் மோசமான பேட்டிங் கம்பீருக்கே பிடிக்கவில்லை. இதனால் சுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார் என உறுதியாக தகவல்கள் கூறுகின்றன. கில்லுக்கு பதிலாக அனைவரும் எதிர்பார்த்தபடி சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற உள்ளார்.

45
சஞ்சு சாம்சன் துணை கேப்டன்?

கில்லிடம் இருக்கும் துணை கேப்டன் பொறுப்பு சஞ்சு சாம்சன் அல்லது ஹர்திக் பாண்ட்யாவிடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது. மற்றபடி இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், ஷிவம் துபேவுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அபிஷேக் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்குவார்.

55
இந்திய அணி பிளேயிங் லெவன்

தென்னப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங்.

Read more Photos on
click me!

Recommended Stories