லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
Rishabh Pant Century : ஐபிஎல் 2025 ப்ளே ஆஃப் சுற்றுக்கான முக்கியமான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சீசன் முழுவதும் சொதப்பிய பண்ட், கடைசி லீக் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் கடைசி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. லக்னோவில் உள்ள எக்கானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் அணி பெரிய ஸ்கோரை எட்டியது.
26
ஆர்சிபிக்கு எதிராக ரிஷப் பண்ட் சதம்
இந்தப் போட்டி ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியமானது. முதல் இரண்டு இடங்களுக்குள் செல்ல வேண்டுமானால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதனால் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆரம்பத்திலேயே பிரீட்ஸை அவுட் ஆக்கியதன் மூலம் ஆர்சிபி முதல் வெற்றியைப் பெற்றது. ஆனால் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய பந்த் போட்டியின் போக்கையே மாற்றினார். அற்புதமான சதத்தை அடித்தார்.
36
55 பந்துகளில் சதம் அடித்த ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் களமிறங்கியவுடன் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 100 ரன்கள் குவித்து தனது ஐபிஎல் வாழ்க்கையில் 2ஆவது சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம் பண்ட் தனது 27 கோடி ரூபாய் ஐபிஎல் ஏல மதிப்புக்கு ஓரளவு நியாயம் செய்தார். சதம் அடித்த பிறகு ரிஷப் பண்ட் ‘ஸ்பைடர்மேன் கொண்டாட்டத்தை’ வெளிப்படுத்தினார்.
46
3ஆவது வரிசையில் களமிறங்கி அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்:
இதுவரையில் லக்னோ அணிக்காக 12 இன்னிங்ஸ் விளையாடிய பண்ட் மொத்தமாக 151 ரன்கள் எடுத்தார். ஆனால், இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி 61 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி 3ஆவது வரிசையில் களமிறங்கி அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 2 சதங்களுடன் ரிஷப் பண்ட் 5ஆவது இடம் பிடித்துள்ளார்.
3ஆவது வரிசையில் களமிறங்கி அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்:
ஏபி டிவிலியர்ஸ் – 3
சஞ்சு சாம்சன் – 3
சூர்யகுமார் யாதவ் – 2
ஹென்ரிச் கிளாசென் – 2
ரிஷப் பண்ட் – 2
56
மிட்செல் மார்ஷ் சூப்பர் இன்னிங்ஸ் மூலம் லக்னோ பெரிய ஸ்கோர்
மறுமுனையில் மிட்செல் மார்ஷும் சூப்பர் இன்னிங்ஸை ஆடினார். வெறும் 37 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். பந்த்துடன் இணைந்து லக்னோ ஸ்கோரை உயர்த்தினார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் மூலம் லக்னோ பெரிய ஸ்கோரை எட்டியது. 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
66
ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சொதப்பல்
ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டத்திற்கும், மிட்செல் மார்ஷின் மின்னல் வேக இன்னிங்ஸுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் திணறினர். பந்துவீச்சில் மாற்றங்களைச் செய்தும் பெரிய பலன் கிடைக்கவில்லை. முக்கியமான போட்டியில் தங்கள் பங்களிப்பால் ஏமாற்றமளித்தனர்.