WPL 2026: RCB VS DC: டெல்லியை பந்தாடி கோப்பையை தட்டித் தூக்கிய ஆர்சிபி! ஸ்மிருதி மந்தனா ருத்ரதாண்டவம்!

Published : Feb 05, 2026, 11:16 PM IST

மகளிர் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி டெல்லியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியுள்ளது. ஸ்மிருதி மந்தனா அதிரடி பேட்டிங் அந்த அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. 

PREV
மகளிர் ஐபிஎல் 2026

மகளிர் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி டெல்லியை பந்தாடி 2வது முறையாக கோப்பையை கையில் ஏந்தி சாதனை படைத்துள்ளது. வதோராவில் நடந்த இந்த இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 57 ரன்கள் விளாசினார். லாரா வோல்வார்ட் 25 பந்தில் 44 ரன்களும், சின்னெல்லே ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர்.

ஆர்சிபிக்கு இமாலய இலக்கு

பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்னில் ஹென்ரி பந்தில் போல்டானார். பின்பு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், ஜார்ஜியா வோலும் அட்டகாசமாக விளையாடினார்கள். ஜார்ஜியா வோல் பவுண்டரிகளாக விளாச, ருத்ரதாண்டவமாடிய ஸ்மிருதி மந்தனா சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கினார்.

ஸ்மிருதி மந்தனா, ஜார்ஜியா வோல் சூப்பர் பேட்டிங்

ஜார்ஜியா 33 பந்தில் அரைசதம் அடிக்க, ஸ்மிதி வெறும் 23 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து இருவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்று அதிரடியில் வெளுத்துக் கட்டினார்கள். அணியின் ஸ்கோர் 174 ரன்களாக உயர்ந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. 54 பந்தில் 14 பவுண்டரியுடன் 79 ரன்கள் விளாசிய ஜார்ஜியா வோல் கேட்ச் ஆனார். பின்பு களமிறங்கிய ரிச்சா கோஸ் (6) விரைவில் அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றி

இதனைத் தொடர்ந்து சூப்பராக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனாவும் ஹென்ரி பந்தில் போல்டானார். ஸ்மிருதி 41 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆர்சிபி கடைசி ஓவரில் வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ரீ சரணி வீசிய கடைசி ஓவரில் ராதா யாதவ் தொடந்து 2 பவுண்டரிகள் விளாசி ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார்.

2வது கோப்பையை வென்ற ஆர்சிபி

ஆர்சிபி அணி 19.4 ஓவரில்4 விக்கெட் இழந்து 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஆர்சிபி அணி WPL 2026 தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்று மாஸ் காட்டியுள்ளது. மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை தட்டித் தூக்குவது இது 2வது முறையாகும். அதே வேளையில் மகளிர் ஐபிஎல்லில் இந்த போட்டியையும் சேர்த்து 4 முறையும் பைனலுக்கு வந்த டெல்லி அணி பரிதாபமாக தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories