விராட் கோலி கோல்டன் டக்
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
விராட் கோலி கோல்டன் டக்
இதில், ஆர்சிபி அணி கிரீன் ஜெர்சியில் களமிறங்குகிறது. இந்தப் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் களமிறங்கினர்.
விராட் கோலி கோல்டன் டக்
முதல் ஓவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் பந்து வீசினார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே விராட் கோலி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 2ஆவது முறையாக விராட் கோலி கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
விராட் கோலி கோல்டன் டக்
அதுவும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கும் போட்டியிலும் சரி, ஆர்சிபி கிரீன் ஜெர்சியில் களமிறங்கும் போட்டியிலும் சரி விராட் கோலி கோல்டன் டக்கில் தான் வெளியேறியிருக்கிறார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த போட்டியில் விராட் கோலி கோல்டன் டக் முறையில் வெளியேறியுள்ளார்.
விராட் கோலி கோல்டன் டக்
அதற்கு முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்த போட்டியிலும் கோல்டன் டக் முறையில் வெளியேறியிருக்கிறார். அதோடு அதிக முறை கோல்டன் டக் ஆனவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். விராட் கோலி 7 முறை கோல்டன் டக் முறையில் வெளியேறியிருக்கிறார்.
விராட் கோலி கோல்டன் டக்
இதில் ரஷீத் கான் 10 முறையும், சுனில் நரைன், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் இணைந்து 7 முறை விராட் கோலி கோல்டன் டக்கில் வெளியேறியுள்ளார். அதுமட்டுமின்றி எப்போதெல்லாம் ஆர்சிபி அணி கிரீன் ஜெர்சி அணிந்து விளையாடுகிறதோ, அந்தப் போட்டிகளில் எல்லாம் 7 முறை தோல்வியை தழுவியுள்ளது.
விராட் கோலி கோல்டன் டக்
11 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே ஆர்சிபி கிரீன் ஜெர்சியில் விளையாடியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு க்ரீன் ஜெர்சியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் தனது 100ஆவது ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.