ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் அபாரமாக ஆடி 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.
இதுவரை ஆடிய 6 போட்டிகளீல் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கீழிலிருந்து 3ம் இடத்தில் இருக்கும் கேகேஆர் அணிக்கு இன்றைய போட்டியில் ஹோம் மைதானத்தில் வெற்றி அவசியம் தேவைப்படுகிறது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. டாஸ் முடிவை பொறுத்து அம்பாதி ராயுடு - மதீஷா பதிரனா ஆகிய இருவரில் ஒருவர் நேரடியாக ஆடும் லெவனிலும், மற்றொருவர் இம்பேக்ட் பிளேயராகவும் களமிறங்குவார்.
அதேபோலவே கேகேஆர் அணியில் வெங்கடேஷ் ஐயர் - சுயாஷ் ஷர்மா ஆகிய இருவரில் ஒருவர் நேரடியாக ஆடும் லெவனிலும் மற்றொருவர் இம்பேக்ட் பிளேயராகவும் ஆடுவார்.
உத்தேச கேகேஆர் அணி:
ஜேசன் ராய், நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர்/சுயாஷ் ஷர்மா, நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், டிம் சௌதி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
உத்தேச சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு/மதீஷா பதிரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்.