பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் 2023 தொடரின் 31ஆவது போட்டி நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசியது.
பஞ்சாப் கிங்ஸ்
அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒவ்வொருவரும் கடைசி வரை அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. இதில், சாம் கரண் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இதே போன்று, ஹர்ப்டீத் சிங் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் கிங்ஸ்
இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் அதிர்ச்சி கொடுத்தார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 44 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.
பஞ்சாப் கிங்ஸ்
கேமரூன் க்ரீன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியாக டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் கிங்ஸ்
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2ஆவது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 3ஆவது பந்தை யார்க்கராக வீசி திலக் வர்மாவை கிளீன் போல்டாக்கினார். இதில், மிடில் ஸ்டெம்ப் பாதியாக உடைந்தது. அடுத்து 3 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது.
பஞ்சாப் கிங்ஸ்
3 சிக்சர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி. அப்போது, இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹால் வதேரா களமிறங்கினார். 4ஆவது பந்தையும் யார்க்கராக வீசி வதேராவை கிளீன் போல்டாக்கினார். ஆனால், அப்போது மிடில் ஸ்டெம்ப் உடைந்தது.
பஞ்சாப் கிங்ஸ்
அடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்கினார். 5ஆவது பந்தில் ரன் எடுக்காத நிலையில், 6ஆவது பந்தில் மட்டுமே ஒரு ரன் எடுக்கப்பட, கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பஞ்சாப் கிங்ஸ்
இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டிகளில் விளையாடிய 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ்
இந்த வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரணுக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் கூறியிருப்பதாவது: இந்த மைதானம் அற்புதமாக இருந்தது. இந்த வெற்றி எங்களுக்கு பெரியது. ஆட்டநாயகன் விருது எனக்கு கிடைத்திருக்க வேண்டியது இல்லை.
பஞ்சாப் கிங்ஸ்
கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும். ஷிகர் தவான் விரைவில் குணமடைவார். இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளோம். ஒவ்வொருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடுகிறோம் என்று கூறியுள்ளார்.