கடந்த சீசனில் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல்லுக்காக, இம்முறை சிஎஸ்கேவும் ஆர்சிபியும் கடும் போட்டியிட்டதால் அவரது விலை உயர்ந்துகொண்டே சென்றது. கடைசியில் ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி ஏலத்தில் எடுத்தது. அண்மையில் மேக்ஸ்வெல், விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் ஆர்சிபியில் ஆடும் தனது ஆர்வத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் விரும்பியபடியே அவரை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்துள்ளது.