இந்நிலையில், சிஎஸ்கே தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவுகள் அனைத்தையும் ஜடேஜா திடீரென மொத்தமாக டெலிட் செய்துவிட்டார். ஜடேஜாவின் இந்த செயல், சிஎஸ்கேவுடனான மோதலையும், அவர் அடுத்த சீசனில் கண்டிப்பாக சிஎஸ்கே அணியில் ஆடமாட்டார் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டதாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர். ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை சிஎஸ்கே அணி இழக்கப்போவதை நினைத்து சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.