WI vs IND: ODI தொடருக்கான இந்திய அணிஅறிவிப்பு; தவான் கேப்டன்!பெரிய தலைகளுக்கு ஓய்வு;இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

Published : Jul 07, 2022, 01:53 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான, ஷிகர் தவான் தலைமையிலான 16 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.   

PREV
17
WI vs IND: ODI தொடருக்கான இந்திய அணிஅறிவிப்பு; தவான் கேப்டன்!பெரிய தலைகளுக்கு ஓய்வு;இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் போட்டி முடிந்து, டி20 தொடர் இன்று தொடங்குகிறது. அதன்பின்னர் ஒருநாள் தொடர் நடக்கிறது.
 

27

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

37

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் ஒருநாள் தொடர் நடப்பதால் இங்கிலாந்து தொடரில் ஆடும் வீரர்களுக்கு ஒருநாள் தொடருக்கான அணியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
 

47

அதனால் ஷிகர் தவான் தலைமையில் 16 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

57

இந்த அணியில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, இஷான் கிஷன் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. காரணமே கூறாமல் ஹர்திக் பாண்டியா புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவரது ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு, அவர் டி20 உலக கோப்பைக்கு முக்கியம் என்பதால் ஒருநாள் அணியில் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
 

67

அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலர்களாகவும், அக்ஸர் படேல், சாஹல் ஆகியோர் ஸ்பின்னர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளனர்.
 

77

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
 

Read more Photos on
click me!

Recommended Stories