தோனி பிறந்தநாள் ஸ்பெஷல்: தோனி கிரிக்கெட் கெரியரின் 5 முக்கியமான, சிறப்பான தருணங்களின் புகைப்பட தொகுப்பு

Published : Jul 07, 2022, 11:58 AM IST

தோனியின் 41வது பிறந்தநாளான இன்று, அவரது கிரிக்கெட் கெரியரின் 5 மிகச்சிறந்த தருணங்களை பார்ப்போம்.  

PREV
18
தோனி பிறந்தநாள் ஸ்பெஷல்: தோனி கிரிக்கெட் கெரியரின் 5 முக்கியமான, சிறப்பான தருணங்களின் புகைப்பட தொகுப்பு

தோனியின் 41வது பிறந்தநாள் இன்று. 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடி 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் ஆடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
 

28

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்தவர் தோனி. 

38

அவரது கிரிக்கெட் கெரியரில் பல சிறப்பான, மகிழ்ச்சியான சம்பவங்களும் தருணங்களும் இருந்தாலும், அவற்றுள் சிறந்த 5ஐ இப்போது பார்ப்போம்.

48

1. 2007 டி20 உலக கோப்பை வெற்றி

2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி வென்ற தருணம் அவரது கெரியரில் முக்கியமானது. 2007 ஒருநாள் உலக கோப்பையில் ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் லீக் சுற்றுடன் வெளியேறியதால் தன்னம்பிக்கை முற்றிலும் சிதைந்து போயிருந்த காலக்கட்டம் அது. அந்த சூழலில் தோனி என்ற புதிய இளம் கேப்டனின் தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி அதே ஆண்டில் நடந்த முதல் டி20 உலக கோப்பையை வென்று, இந்திய கிரிக்கெட்டுக்கு புது ரத்தம் பாய்ச்சியது.

58

2. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக முதலிடம் பிடித்த இந்திய அணி

தோனியின் கேப்டன்சியில் 2009ம் ஆண்டு இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றதையடுத்து முதலிடம் பிடித்தது. அந்த குறிப்பிட்ட தொடரில் தோனி 2 சதங்கள் அடித்தார். 2009லிருந்து 2011 ஜூலை வரை இந்திய அணிதான் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது.
 

68

3. 2011 ஒருநாள் உலக கோப்பை வெற்றி

2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலக கோப்பையை இந்திய அணி வென்றது, தோனியின் கெரியரில் முக்கியமான தருணம். 1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணியின் ஒருநாள் உலக கோப்பை கனவை நனவாக்கினார் தோனி. தோனியின் கேப்டன்சியில் யுவராஜ் சிங், சேவாக், கம்பீர், ஜாகீர் கான் ஆகிய வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் அந்த உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இலங்கைக்கு எதிரான ஃபைனலில் 91 ரன்களை குவித்து தோனி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
 

78

4. 2013ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரட்டை சதம்

2013ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட்டில், தோனி விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடியதுடன், அதன்பின்னர் டெயிலெண்டர்களை வைத்துக்கொண்டு மறுமுனையில் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். 266 பந்தில் 224 ரன்களை குவித்தார் தோனி. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த அந்த டெஸ்ட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்த தொடரிலும் இந்திய அணி 4-0 என ஆஸ்திரேலியாவை செய்து வென்றது. 
 

88

5. 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி

டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை வென்றுவிட்ட கேப்டன் தோனிக்கு சாம்பியன்ஸ் டிராபி மட்டும் எஞ்சியிருந்தது. அதுவும் 2013ம் ஆண்டு வசப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. அந்த கோப்பையை வென்ற பின் தான், 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்தார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories