World Cup 2027
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடந்தது. இதில், ஒரு அரையிறுதிப் போட்டி உள்பட 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.
Ravichandran Ashwin Retirement
கடந்த 19 ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.
ODI
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 43 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 6ஆவது முறையாக உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது.
Cricket World Cup 2027
இதன் காரணமாக சொந்த மண்ணில் டிராபியை இழந்த இந்திய வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத காட்சி போட்டியை காண வந்த ரசிகர்களையும் கண் கலங்கச் செய்தது. இதையடுத்து வரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடக்க இருக்கிறது.
Indian Players Age at World Cup 2027
ஆனால், அதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளிட வீரர்கள் இடம் பெறுவார்களா என்பது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா 37 வயதை நெருங்கிவிட்டார். ரவிச்சந்திரன் அஸ்வினும் 38 வயதை நெருங்கிவிட்டார்.
ODI World Cup 2027
இந்த நிலையில் தான் அவர்களுக்கு இந்த உலகக் கோப்பை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது என்பது புரிகிறது. எனினும், 2027 உலகக் கோப்பையின் போது இந்திய வீரர்களின் வயது எவ்வளவு என்றால்,
2027 World Cup
ரோகித் சர்மா – 40
விராட் கோலி – 39
சுப்மன் கில் - 28
இஷான் கிஷான் - 29
ஷ்ரேயாஸ் ஐயர்- 32
கேஎல் ராகுல் - 35
சூர்யகுமார் யாதவ் - 37
ஹர்திக் பாண்டியா - 33
ரவீந்திர ஜடேஜா - 38
ரவிச்சந்திரன் அஸ்வின் - 41
ஜஸ்ப்ரித் பும்ரா - 33
குல்தீப் யாதவ் - 32
முகமது ஷமி - 37
முகமது சிராஜ் - 33
பிரசித் கிருஷ்ணா - 31
ஷர்துல் தாக்கூர் - 36
IND vs AUS Final
2027-ம் ஆண்டு வீரர்களின் வயதைப் பார்த்தால், ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 40 வயதுக்கு மேல் இருப்பார்கள், எனவே அவர்கள் வரவிருக்கும் உலகக் கோப்பை அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு இல்லை, அதே நேரத்தில் விராட் கோலி 39 வயது, இதில் தொடர்ந்து விளையாடலாம். அவர் தொடர்ந்து நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.
World Cup Final 2023
சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் 2027 ஆம் ஆண்டில் 35-க்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள், எனவே, அவர்கள் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.
IND vs AUS World Cup Final
2027 உலகக் கோப்பையில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் போன்ற இளம் வீரர்கள் 28-29 வயதுடையவர்களாக இருப்பார்கள். பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற மற்றவர்களுக்கு 30-35 வரை இருக்கும், அது அவர்களின் ஃபார்ம் மற்றும் 2027 இல் நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தது.