உலகக் கோப்பை மீது கால் வைத்த மிட்செல் மார்ஷ் மீது எஃப்ஐஆர் – கிரிக்கெட் விளையாட தடை?

Published : Nov 24, 2023, 09:38 PM IST

உலகக் கோப்பை டிராபி மீது கால் வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷிற்கு எதிராக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

PREV
19
உலகக் கோப்பை மீது கால் வைத்த மிட்செல் மார்ஷ் மீது எஃப்ஐஆர் – கிரிக்கெட் விளையாட தடை?
FIR against Mitchell Marsh

இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி கடந்த 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது.

29
Mitchell Marsh - World Cup 2023

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் அதிரடியால் 43 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.

39
Mitchell Marsh - IND vs AUS World Cup 2023

இதையடுத்து உலகக் கோப்பை டிராபியுடன் ஆஸ்திரேலியா வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தனித்தனியாக டிராபியுடன் போஸ் கொடுத்தனர். https://x.com/DailyCultureYT/status/1727900704025817181?s=20

49
மிட்செல் மார்ஷ்

ஆனால், மிட்செல் மார்ஷ் மட்டும் ஒருபடி மேல் சென்று டிராபி மீது கால் வைத்து போஸ் கொடுத்திருந்தார். இந்தப் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

59
உலகக் கோப்பை மீது கால் வைத்த மிட்செல் மார்ஷ் மீது வழக்கு

கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் மிட்செல் மார்ஷின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தான் மிட்செல் மார்ஷ் மீது உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது செயல் இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

69
உலகக் கோப்பை 2023

அலிகாரைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் பண்டிட் கேசவ், என்பவர் மிட்செல் மார்ஷ் மீது புகார் அளித்துள்ளார். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, அந்த மார்ஷை இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதைத் தடுக்குமாறு வலியுறுத்தினார்.

79
பேட் கம்மின்ஸ்

பண்டிட் கேசவ் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: உலகக் கோப்பை டிராபியில் தனது கால்களை வைத்த மார்ஷின் செயல் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் உணர்வுகளை ஆழமாக புண்படுத்தியதாகக் கூறி, அவர் மீது புகார் அளித்திருந்தார்.

89
6 ஆவது முறை சாம்பியனான ஆஸ்திரேலியா - உலகக் கோப்பை 2023

அந்த புகாரை புரிந்த கொண்ட போலீசார் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். மேலும், அந்த புகாரின் நகலை பிரதமர் மோடிக்கும் அனுப்பி வைத்துள்ளார். 

99
Mitchell Marsh

தனது சொந்த ஊருக்கு வந்த முகமது ஷமி, உலகில் உள்ள அனைத்து அணிகளும் போராடும் ஒரு டிராபிக்கு, மிட்செல் மார்ஷ் செய்த இந்த செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை. காயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருந்தார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories