ஐபிஎல் ஏலத்தில் நுழையும் டிராவிஸ் ஹெட் – தட்டி தூக்க காத்திருக்கும் அணி எது?

First Published | Nov 24, 2023, 1:35 PM IST

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்க காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் ஐபிஎல் ஏலத்தித்திற்கான தனது பெயரை கொடுத்துள்ளார்.

Travis Head IPL Mini Auction 2024

ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 2024ஆம் ஆண்டுக்கான 17ஆவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்காக ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் தனது பெயரை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிராவிஸ் ஹெட் ஐபிஎல் மினி ஏலம்

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tap to resize

Travis Head - IPL Mini Auction 2024

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் டிராவிஸ் ஹெட். இவர் நிலையாக நின்று 120 பந்துகளில் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக உலகக் கோப்பை டிராபியை வென்றது.

Travis Head - IPL 2024 Auction

இதே போன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும், ஜூன் மாதம் லண்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

Travis Head - India vs Australia WC Final 2023

இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Travis Head - IND vs AUS World Cup Final 2023

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு டிராவிஸ் ஹெட் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளில் டிராவிஸ் ஹெட் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

Travis Head - World Cup 2023

ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 205 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 75 ரன்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் அணிகள் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வரும் 26 ஆம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும்.

Travis Head - IPL 2024

அதன் பிறகு இறுதிபட்டியலை ஏலக் குழு இறுதி செய்யும். வரவிருக்கும் ஐபிஎல் 2024, அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸீல் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Travis Head - IPL Auction 2024

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் ஐபிஎல் மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் டிராவிஸ் ஹெட்டை ஏலம் எடுக்க போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!