IND vs AUS 1st T20 Match: ரோகித் சர்மா 148 போட்டிகளில் செய்ததை சூர்யகுமார் யாதவ் 54 போட்டிகளில் செய்து சாதனை!

First Published | Nov 24, 2023, 11:29 AM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 13ஆவது ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலமாக ரோகித் சர்மா சாதனையை முறியடித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்யவே, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 110 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 208 ரன்கள் எடுத்தது.

india vs australia first t20 match

பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஷ்வாலும் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இஷான் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Tap to resize

T20 Captain SKY

அதன் பிறகு வந்த திலக் வர்மா 12 ரன்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஒரு கேப்டனாக தனது அறிமுக டி20 போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

India vs Australia 1st T20 Match

மேலும், கேஎல் ராகுலைத் தொடர்ந்து ஒரு கேப்டனாக டி20 போட்டியில் அரைசதம் அடித்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்தார். இதையடுத்து சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அவர், 42 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 80 ரன்கள் சேர்த்தார்.

IND vs AUS T20

இறுதியாக ரிங்கு சிங் 22 ரன்கள் எடுக்க இந்திய கடைசி ஓவரில் 5 ஆவது பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் 80 ரன்கள் குவித்ததன் மூலமாக சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். இதுவரையில் 54 டி20 போட்டிகள் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 13 ஆவது முறையாக ஆட்டநாயகன் விருது வென்று ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

Suryakumar Yadav

ரோகித் சர்மா 148 டி20 போட்டிகளில் 12 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். மேலும் விராட் கோலி 115 போட்டிகளில்       15 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!