Published : Apr 29, 2023, 12:54 PM ISTUpdated : Apr 29, 2023, 12:58 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரஹானே தேர்வு செய்யப்பட்டதற்கு விமர்சனம் செய்தவர்களுக்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
211
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
20 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் ஒன்றுக் கொன்று மோதுகின்றன. இதற்கு முன்னதாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்து கோப்பையை கோட்டைவிட்டது.
311
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இதையடுத்து தொடர்ந்து 2ஆவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், அஜிங்கியா ரஹானேவும் இடம் பெற்றிருந்தார்.
411
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
கடந்த 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் விராட் கோலிக்குப் பதிலாக ரஹானே கேப்டனாக செயல்பட்டு வரலாற்று சாதனையை பெற்றுக் கொடுத்தார்.
511
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
அதன் பிறகு சதமடிக்காத நிலையில், தொடர்ந்து தடுமாறி வந்த ரஹானே கழற்றிவிடப்பட்டார். எனினும், ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து தான் இன்னமும் ஃபார்மில் இருப்பதை நிரூபித்த ரஹானே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.50 லட்சத்திற்கு இடம் பெற்று 5 போட்டிகளில் விளையாடி 209 ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
611
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இதன் காரணமாக வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக செயல்படக் கூடிய ரஹானே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றார்.
711
அஜிங்கியா ரஹானே
அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று முரளி கார்த்திக், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ரஹானேவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
811
அஜிங்கியா ரஹானே
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ரஹானே மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய அவர் தான் இன்னமும் ஃபார்மில் இருப்பதை நிரூபித்து வருகிறார். அதே போன்று அனுபவமிக்க வீரரும் கூட. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
911
அஜிங்கியா ரஹானே
எனினும் 3 போட்டிகளில் விளையாடிய நிலையில் மட்டும் ரஹானே தேர்வு செய்யப்பட்டதாக சிலர் விமர்சிக்கின்றனர். அவர்கள் எல்லோரும், கடந்த 6 மாதமாக கிரிக்கெட்டை பார்க்காமல் அவர்கள் காட்டுக்குள் இருந்திருப்பரகள் என்று நினைக்கிறேன். அவர்கள் லீவில் இருந்தால் தான் ரஹானே 600 ரன்கள் அடித்ததை பார்த்திருக்க மாட்டிர்கள்.
1011
அஜிங்கியா ரஹானே
இறுதிப் போட்டிக்கு எப்படியும் அனுபவமிக்க வீரர் தேவை. அதற்காக ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றுக் கொடுத்த ரஹானேவை மறந்திடக் கூடாது.
1111
அஜிங்கியா ரஹானே
அதுவும் விராட் கோலி நாடு திரும்பிய போது ரஹானே கேப்டனாக செயல்பட்டார். மெல்போர்ன் மைதானத்தில் அவர் அடித்த சதத்தை மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அவரது அனுபவம் கண்டிப்பாக இந்திய அணிக்கு தேவை என்று கூறியுள்ளார்.