சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது முதல் பார்ட் முடிந்த நிலையில், 2ஆவது பார்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ்
இதே போன்று முதலில் ஆடிய அணியை விட சேஷிங் செய்த அணி அதிகளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தான் தற்போது கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் சேஷிங் செய்த அணி வரிசையாக தோல்வியை சந்தித்து வந்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
நேற்று மொஹாலியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கும் இடையிலான 38ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் என்னவே பஞ்சாப் கிங்ஸ் தான் ஜெயிச்சது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இதையடுத்து லக்னோ அணி முதலில் ஆடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றின் 2ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்தது. 3ஆவது இடத்திலும் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் தோல்வி
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.