IPL 2023: நான் நெனச்சது தப்பு ஆகிருச்சு..! அந்த 2 பசங்க தான் எங்க தோல்விக்கு காரணம்.. தோனி அதிரடி

First Published | Apr 28, 2023, 5:51 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து தோனி கூறியதை பார்ப்போம்.
 

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சிஎஸ்கே இடையேயான போட்டியில் சிஎஸ்கேவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
 

ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 43 பந்தில் அவர் 77 ரன்களை குவித்தார். அதன்பின்னர் பின்வரிசையில் த்ருவ் ஜுரெல் அதிரடியாக ஆடி 15 பந்தில் 34 ரன்களை விளாச 20 ஓவரில் 202 ரன்களை குவித்தது ராஜஸ்தான் அணி. ஐபிஎல்லில் ஜெய்ப்பூர் மைதானத்தில் முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தது ராஜஸ்தான் அணி.

IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
 

Tap to resize

203 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே (33 பந்தில் 52 ரன்கள்) மற்றும் டெவான் கான்வே(29 பந்தில் 47 ரன்கள்) ஆகிய இருவர் மட்டுமே நன்றாக ஆடினர். அவர்களை தவிர மற்ற வீரர்கள் சோபிக்காததால் 20 ஓவரில் 170 ரன்கள் மட்டுமே அடித்து 32 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவ, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

IPL 2023: தோனியின் வெற்றி மந்திரம் இதுதான்..! ஹர்பஜன் சிங் கருத்து
 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்ய, சிஎஸ்கே கேப்டன் தோனி, நான் டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் தான் வீசியிருப்பேன் என்றார். ஆனால் போட்டி முடிந்த பின் பேசிய தோனி, பிட்ச் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆட சாதகமாக இருந்தது. இந்த ஸ்கோர் சற்றே அதிகமானது என்றார். மேலும், தொடக்கத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், இறுதியில் த்ருவ் ஜுரெலும் அதிரடியாக ஆடியதால் தான் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் உயர்ந்ததாகவும் தெரிவித்தார் தோனி.
 

Latest Videos

click me!