சென்னைக்கு எதிராக ரோகித் சர்மாவிற்கு அடுத்தபடியாக சாதித்து காட்டிய இளம் கேப்டன் சஞ்சு சாம்சன்!

Published : Apr 28, 2023, 04:19 PM IST

சென்னைக்கு எதிரான போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 4ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.  

PREV
110
சென்னைக்கு எதிராக ரோகித் சர்மாவிற்கு அடுத்தபடியாக சாதித்து காட்டிய இளம் கேப்டன் சஞ்சு சாம்சன்!
சஞ்சு சாம்சன்

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான 37ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர் ஆர் அணி முதலில் பேட்டிங் தேர்வ் செய்தது. 
 

210
சஞ்சு சாம்சன்

அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் அடித்துக் கொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் துருவ் ஜூரெல் 34 ரன்கள், படிக்கல் 27 ரன்கள் நாட் அவுட் என்று ரன்கள் சேர்க்க இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
 

310
சஞ்சு சாம்சன்

தனது 200ஆவது போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களுரு அணிக்கு எதிராக ஒரு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

410
சஞ்சு சாம்சன்

சென்னையின் பேட்டிங் பலத்திற்கு 200 ரன்கள் எல்லாம் ஜூஜூபி ஸ்கோராக இருந்தாலும், நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறியது. டெவான் கான்வே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடிக்கு பெயர் போன ருத்துராஜ் கெய்க்வாட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே 15, இம்பேக்ட் பிளேயராக வந்த ராயுடு 0 என்று நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

510
சஞ்சு சாம்சன்

ஒரு புறம் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த ஷிவம் துபே, இந்த சீசனில் தொடர்ந்து 3 அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த ஜடேஜா மற்றும் மொயீன் அலி இருவரும் தங்களது பங்கிற்கு போராட, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் பந்து வீச்சில் தட்டு தடுமாறினர். அவர்கள் கடைசியில் அதிகளவில் சிக்ஸர்கள் அடிக்கவில்லை. ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர். 
 

610
சஞ்சு சாம்சன்

மொயீன் அலி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 23 ரன் எடுத்து களத்தில் இருந்தார். கடைசி வரை தோனி களமிறங்கவில்லை. இவரது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

710
சஞ்சு சாம்சன்

இதற்கு முன்னதாக தனது ஹோம் மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு புள்ளிபட்டியலில் 2ஆவது இடத்திலிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

810
சஞ்சு சாம்சன்

இரு அணிகளும் கடைசியாக மோதிக் கொண்ட 7 போட்டிகளில் 6 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இவ்வளவு ஏன், கடந்த 2019 ஆம் ஆண்டு வரை மோதிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 வெற்றிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், அதன் பிறகு சென்னை 15 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வெற்றிகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

910
சஞ்சு சாம்சன்

சென்னைக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த 2ஆவது அணி என்ற சாதனையையும் ராஜஸ்தான் ராயல்ஸ் (13) அணி படைத்துள்ளது. முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் (20) அணி இடம் பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் (12) உள்ளது.

1010
சஞ்சு சாம்சன்

அதுமட்டுமின்றி ஒரு கேப்டனாக சென்னைக்கு எதிராக தொடர்ந்து 4ஆவது முறையாக வெற்றி பெற்று சென்னைக்கு எதிராக அதிக முறை வெற்றி பெற்ற கேப்டன்களின் பட்டியலில் சஞ்சு சாம்சன் (4) 2ஆவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா (4) இருக்கிறார்.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories